உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் அதிரடி அறிவிப்பு!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன்படி, பாடசாலைகளுக்கு வெளியில் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இன்றையதினம் (16-07-2024) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.