உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இன்று முதல் சாரதி அனுமதி அட்டைகள்!

தற்காலிக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
600,000 பேருக்கு அனுமதி அட்டைகள்
அதன்படி உத்தியோகபூர்வ சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் தபால் மூலம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி சுமார் 600,000 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும், இந்த விநியோகம் சில வாரங்களில் நிறைவடையும் என்றும் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.