உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையின் வாகன சந்தைக்கு புதிதாக வரும் 44,430 வாகனங்கள்

இலங்கையில வாகனங்கள் இறக்குமதி தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் உள்ளடங்குவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இறக்குமதி தடைகளை நீக்குவது தொடர்பாக வாகன வாகன உதிரிபாகங்களை இணைக்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், உதிரிபாகங்களை இணைத்து விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
இக்கலந்துரையாடலில் பல உள்ளூர் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் ஆழமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் அதே வேளையில், உள்ளூர் வணிகங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை இலங்கையில் வாகன உற்பத்திக்கு ஊக்கமளிப்பதாகத் தெரிவித்த அவர்கள், ஒரு நாடு வாகன உற்பத்தியைத் தொடங்குவது நீண்ட காலச் செயலாகும் என குறிப்பிட்டுள்ளனர்.