உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் இன்றையதினம் பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் தொடர்பான தகவல்களை அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்று 24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 24,000 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 192,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 22,200 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 177,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.