உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கிளிநொச்சியில் சிறுபோக நெற்செய்கையில் அதிகரித்த நோய் தாக்கம் : விவசாயிகள் கவலை

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதுடன் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருபத்தி இரண்டாயிரத்து 781.25 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதாவது நெல் வயல்களில் தத்தி, மடிச்சுக்கட்டி, இலை சுருட்டி போன்ற நோய்களின் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.
கடந்த கால போகத்திலும் இவ்வாறான நோய் தாக்கம் காரணமாக பெரும் அழிவுகளை சந்தித்த விவசாயிகள் இம்முறை சிறுபோகத்திலாவது ஓரளவு விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த போதும் இவ்வாறு நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றமையால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.