உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் பதற்ற நிலை… தேசிய நூலக கட்டடத்தில் பாரிய தீ விபத்து!

கொழும்பில் உள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை கட்டடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு சற்று பதற்ற நிலை நிலவியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (10-07-2024) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த கட்டடத்தின் தரைத் தளத்தில் உள்ள ஒன்றுகூடும் மண்டபத்துக்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீயை கட்டுப்படுத்தும் பணியில் பல தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.