உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் சாரதி உயிரிழப்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலில் வரிசையில் நின்ற கொள்கலன் வாகனமொன்றின் சாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் கரையோர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
60 முதல் 65 வயதுக்கிடைப்பட்ட குறித்த சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.