போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சக கைதிகளினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு
![சக கைதிகளினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/12-17.jpg)
காலி சிறைச்சாலையில் சக கைதிகளினால் தாக்கப்பட்டு கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 26 ஆம் திகதி இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காலி, பலகொட பிரதேசத்தைச் சேர்ந்த கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிறைச்சாலையிலிருந்த சக கைதிகளினால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ள நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.