உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சஜித் பிரேமதாச நகர சபைக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு கூட தகுதியற்றவர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியின் மகனாக இல்லாவிட்டால் மட்டக்களப்பு நகர சபைக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு கூட தகுதியற்றவர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகவும் கட்சித் தலைவராகவும் இருப்பதற்கான ஒரே தகுதி அவர் ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பது மட்டுமே என்றும் அனுர கூறினார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுர திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.