உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சடலமாக மீட்கப்பட்ட பெண்: விசாரணைகள் ஆரம்பம்

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிரிகல பிரதேசத்தில் நேற்று (09) காலை பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டதாகவும் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமானது சிரிகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொனராகலை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.