உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்த 80 வயது முதியவர்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
பாணந்துறை – கிரிபெரிய பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான நிமல் சில்வா என்ற முதியவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
நிமல் சில்வா ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாவார்.
கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என்பார்கள். இதற்கமைய குறித்த முதியவர் பரீட்சையில் தோற்றியுள்ளமை கல்வி மீதான அவரது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.