உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சிறைச்சாலை அதிகாரிக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்

காலி – பூஸா சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பூஸா சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரின் வீட்டிற்கு சென்ற அடையாளம் தெரியாத இருவர் அவரது குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த அச்சுறுத்தல் காரணமாக குறித்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.