உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
செல்வச்சந்நிதி தேர் திருவிழாவில் 35 பவுணை பறிகொடுத்த பக்தர்கள்!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் 35 பவுண் வரையான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சப பெரும் திருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றது.
நேற்று (18) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.
சன்னதியானின் தேர்த் திருவிழாவினை காண நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் செல்வச்சந்நிதி ஆலயத்தில் திரண்டனர்.
இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய திருடர்கள், பக்தர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.