உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் – பசில் இடையே இன்றிரவு விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணிலுக்கு மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்றிரவு விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு பசில் ராஜபக்ஷவிடம் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
இருப்பினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாட்டை பஸில் உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
இருவருக்கும் இடையில் நேற்று இரவும் சந்திப்பொன்று நடைபெற்றது.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கப் பெறுமா அல்லது இல்லையா என்பது இன்றைய சந்திப்பின் பின்னர் தெரியவரும் என அறியமுடிகின்றது.