உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழர் பகுதியில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட விபரீதம்! 30 மாணவர்கள் வைத்தியசாலையில்
திருகோணமலையில் உள்ள மூதூரில் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் (25-06-2024) இரவு இடம்பெற்றுள்ளது.
மூதூரிலுள்ள பாடசாலை ஒன்றில் மாலை நேர வகுப்புக்குச் சென்ற மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் 30 மாணவர்கள் உடனடியாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.