உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளைஞன் கைது!

காலி மாவட்டம் – புஸ்ஸ பகுதியில் நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் காலி புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புஸ்ஸ பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு 6 கிராம் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பணம், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ரத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.