உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
புத்தாண்டு விழாவில் நடந்த விபரீதம் ; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் பலி
அம்பாறை – மஹாஓயா சமகிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவுக்குச் சென்ற குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் மஹஓயா சமகிபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திசாநாயக்க முத்யன்சேலாகே வசந்த குமார என்ற இளைனே உயிரிழந்துள்ளார்.
சம்பவதினம் தம்மை தாக்கியவர்களுடன் உயிரிழந்த நபர் தகராறு செய்து, அதன் பின்னர் பாதிக்கப்பட்ட நபரும் அவரது சகோதரரும் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.