உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த நபர்!

முல்லைத்தீவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து சம்பவத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு ரெட்பானா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் பயணித்த முதியவரை மோதியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் தர்புரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிலந்துள்ளார்.
இறந்தவரின் சடலம் தருமபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.