உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் திடீர் சுற்றிவளைப்பு; தலைதெறிக்க ஓடிய நபர்கள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று வியாழக்கிழமை அதிகாலை மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
கஞ்ச கடத்தல் இடம்பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக வெற்றிலைக்கேணி கடற்படை மற்றும் சிறப்பு அதிரடி படையினர் இணைந்து தாளையடி பகுதியில் தேடுதல் நடாத்தியுள்ளனர்.
இதன்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில் 135 கிலோ மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 135 கிலோ கிராம் எடையுள்ள 03 கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றிய வெற்றிலைக்கேணி கடற்படை, மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் கஞ்சாவை பொதிகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.