உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் மண்டாஸ் புயலால் வீட்டின் மீது விழுந்த பனைமரம்!

யாழ்.ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியில் வீட்டின் அருகில் நின்றிருந்த பனை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
“மண்டாஸ்” புயல்
“மண்டாஸ்” புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் மிதமான மழை மற்றும் அவ்வப்போது பலமாக காற்று வீசிவருகின்றது.
இந்நிலையிலேயே கரம்பன் பகுதியில் வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்துள்ளது.
எனினும் உயிராபத்துக்கள் எற்படவில்லை எனவும், பனை மரம் விழுந்ததால் வீட்டின் ஒருபகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.