உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் 25 வயதான இளைஞனை கைது செய்த விசேட அதிரடிப் படையினர்! சிக்கிய பொருள்

யாழ். பருத்தித்துறை வல்லிபுரம் கரையோரப் பகுதியில் யாக்காறு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வழங்கிய தகவலின் அடிப்படையில், இரண்டு சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட 10 மில்லியன் ரூபா பெறுமதியான 60 கிலோ கிராம் கஞ்சாவை வைத்திருந்த 25 வயதுடைய இளைஞனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாக்கரு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.