உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்துவெளி கடற்கரை பகுதியில் இனம் தெரியாத ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சடலம் உருக்குலைந்த நிலையில், காணப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.