உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ரஷ்யாவில் இருந்து இராணுவ வீரர்களை அழைக்க கலந்துரையாடல்

ரஷ்யாவில் உள்ள இலங்கை இராணுவத்தினரை நாடு திரும்புவது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.
இதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் ரஷ்யாவிற்கு செல்லவுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் காமினி வலேபொட ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.