உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வடக்கு நோக்கிய புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு

வடக்கு நோக்கிய புகையிரத மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் (07.01.2023) ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் எதிர்வரும் (07.01.2023) ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இக் காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரை மட்டுமே புகையிரத சேவைகள் இடம்பெறும்.