உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வீட்டைவிட்டு வெளியேறிய பெண் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

கட்டுநாயக்க வல்பொல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
கணவரின் தாய், தந்தை மற்றும் மகளுடன் வசித்து வந்த இவர் கடந்த 25ஆம் திகதி வல்பொல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்கு அருகில் நேற்று (29) காலை குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடியல தெமங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.