உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வேட்பாளர் இரட்டை குடியுரிமை விவகாரம்: தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து
எந்தவொரு தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யும் நபர்களின் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் தனது ஆணையத்திற்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commision) பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய குடியுரிமையைக் கொண்டுள்ள காரணத்தினால் அண்மையில் டயானா கமகே (Diana Gamage) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
இந்த சம்பவத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
இதேவேளை, வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் ஒருவரின் குடியுரிமை தொடர்பில் பரிசீலிக்காதது ஏன் என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அதற்கு பதிலளிக்கும் வகையில் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் ஆணைக்குழுவிற்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு எதிராக எந்தவொரு நபரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அந்தந்த தேர்தல்களுக்குரிய சட்டமூலங்களுக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ள மாத்திரமே எங்களால் முடியும். சட்டங்களை மீறி எங்களால் செயற்பட முடியாது.
குறித்த ஒரு நாளிலேயே வேட்புமனு தாக்கல் செய்ய வழங்கப்படுகின்றது. இந்த குறுகிய காலப்பகுதிக்குள் இவ்வாறான விசாரணைகளை மேற்கோள்ள முடியாது. அதற்கான திறனும் எங்களிடம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.