உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் ; ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிக்கை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்று, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும், நிலையான அமைதிக்கான முதற்கட்ட முன்னேற்றமாகவும் அமைகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் “தோட்டாக்கள் அல்ல, வார்த்தைகள்” என்ற அடிப்படையில் செயல்பட்டுள்ளமை, இராஜதந்திரத் திறமையின் அறிகுறி எனவும் அவர் பாராட்டினார்.இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நெருங்கிய நண்பு நாடுகள் இடையே அமைதி ஏற்படுவதால், பிராந்திய ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என இலங்கை நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.மேலும், தற்போது இடம்பெறுகின்ற கலந்துரையாடல்களை இலங்கை ஆதரிக்கிறது என்றும், அமைதி நிலை திரும்ப தேவையான எந்தவொரு பங்களிப்புக்கும் தயாராக உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.