உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வீட்டினுள் பரவிய தீ ; எரிந்து கருகிய மூன்று பிள்ளைகளின் தந்தை

பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்த – மீரியபெத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்ததாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
66 வயதுடைய இவர், சம்பவம் நேரத்தின் போது தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டின் உட்பகுதி முழுவதும் தீயால் சூழப்பட்ட நிலையில், அவர் தீயுடன் வெளியே வந்தவுடன் தரையில் சரிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
வீட்டின் சமையலறையில் ஒரு வெற்று பெட்ரோல் கலன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பவத்திற்கான முக்கியமான ஆதாரமாக கருதப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கொஸ்லந்த பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இது தற்கொலைச்செயலா அல்லது விபத்தா என்பதை உறுதிப்படுத்த தீயணைப்பு பிரிவு மற்றும் நீதிமன்ற நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் இணைந்து மேலதிக விசாரணை நடத்துகின்றனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதாலும், வீட்டில் தனியாக இருந்த நிலையில் நடந்த இந்த சோக நிகழ்வு, சுற்றுவட்டார மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.