உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கனடாவில் மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கிய ஈழத் தமிழன்

மனநல சவால்களை எதிர்கொள்வோருக்கு ஆதரவாக, கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர் ரோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதன், ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு அறக்கட்டளைக்கு மில்லியன் டொலர் நன்கொடை அளித்துள்ளனர்.
1969ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வடமராட்சியில் பிறந்த ரோய் ரத்னவேல், பதினேழு வயதில் அரசியல் கைதியாகி, கொடூரமான அடக்குமுறை சூழ்நிலைகளில் சிறைவாசம் அனுபவித்த பின்னர், சிறையிலிருந்து அதிர்ஷ்டவசமாக விடுவிக்கப்பட்டார். அதன்பின் தனது சட்டைப்பையில் வெறும் $50 மட்டுமுடன், பதினெட்டு வயதில் கனடாவை அடைந்தார்.
தற்போது, கனடாவின் முன்னணி சுயாதீன சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றில் நிர்வாகியாக பணியாற்றும் அவர், தனது வாழ்க்கை அனுபவங்கள் மூலம் மனநலத்துக்கான துன்பங்களை நன்கு உணர்ந்தவர். அதன் விளைவாக, மனநலப் பிரச்சினைகளை எதிர்த்து போராடும் நபர்களுக்கான ஆதரவினை வழங்க முன்வந்துள்ளதோடு, பிர்ச்மவுண்ட் மருத்துவமனையின் உள்நோயாளி மனநலப் பிரிவை விரிவுபடுத்துவதற்கும், தொடர்ச்சியான மனநலத் தேவைகள் மற்றும் சிக்கலான சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கும் இந்த நன்கொடை முக்கிய பங்களிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோய் ரத்னவேல் மற்றும் சூ நாதனின் இந்த சமூக பங்களிப்பு, கனடா மற்றும் உலகத் தமிழர்களிடையே பெருமிதத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.