உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில், தற்போது தேங்காய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபாவுக்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சில சந்தைகளில் இது 245 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஒவ்வொன்றாக உயர்ந்து வரும் சூழ்நிலையில், தேங்காய் விலையிலும் கடுமையான ஏற்றம் காணப்படுகிறது. இது மக்களின் நாளாந்த செலவுகளை பெரிதும் பாதிக்கக்கூடியதாக உள்ளது” என தெரிவித்தார்.
மேலும், தேங்காய் விலை உயர்வுக்கு, உற்பத்தி குறைவு, மழை பாதிப்பு, போக்குவரத்து செலவுகளின் உயர்வு உள்ளிட்டவை காரணமாக உள்ளன என்றும் நுகர்வோர் முன்னணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை நிலைதடுமாறும் சூழ்நிலையில், அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.