உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தென்னிலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; இளைஞன் பலி

நேற்று இரவு, பாணந்துறை – ஹிரண பகுதியில், ஒரு வீடு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் உயிரிழந்தார், மற்றொரு நபர் காயமடைந்துள்ளார்.
பொலிஸாரின் விசாரணைகளின்படி, உந்துருளியில் பிரவேசித்த இரு அடையாளத் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என தெரியவந்துள்ளது.
காயமடைந்த இருவரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 35 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார், மற்றொரு 20 வயதுடைய நபர் சிகிச்சை பெறும் நிலையில் உள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட டீ-56 ரக துப்பாக்கி என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தென்னிலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.