உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்த மலேசிய கப்பல்!

மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் பயணித்த “Ida Stella” எனும் சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
நேற்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இக்கப்பல் இன்று காலை கொழும்பில் தங்கியது.
இதில் அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.
இன்று பயணிகள் கொழும்பு, பின்னவல, கண்டி மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இச்சம்பவம், இலங்கையின் சுற்றுலா துறையின் மீள்உயிர்ப்பு முயற்சிக்கு உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.