உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சுற்றிவளைப்பில் கைதான மூவர் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள்

கல்கிஸ்ஸ பகுதியில் போதைப்பொருள் குற்றச்செயல்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் கல்கிஸ்ஸ, ஜபோஸ்லேன், ராஹூல் வீதி மற்றும் இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றன.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, ஜபோஸ்லேன் பிரதேசத்தில் 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர், ராஹூல் வீதியில் 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் மற்றொருவர், இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 32, 39 மற்றும் 54 வயதுடைய மொரட்டுவ, இரத்மலானை மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.