உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் தொடரும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் ஐவர் காயம்

இன்று (30) பிற்பகலில், கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மழையால் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழையுடன் கூடிய பலத்த காற்றின் தாக்கத்தால், கொழும்பின் முக்கிய வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. குறிப்பாக, ரீட் மாவத்தை, ஜாவத்தை ஒழுங்கை, மற்றும் கின்சி – ஹோர்ட்டன் பிரதேசங்களில், மரங்கள் வீழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும் வகையில், பாதுகாப்புடன் செயல்படுமாறும், பாதிக்கப்பட்ட வீதிகளை விட்டு விலகி செல்லுமாறும், காவல்துறையினர் வலியுறுத்தி அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சீரற்ற வானிலை சூழ்நிலை தொடரலாம் என்பதையடுத்து, வானிலை அறிவுறுத்தல்களையும், பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகளின் வழிகாட்டல்களையும் பொதுமக்கள் கவனத்துடன் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
மேலதிக அனர்த்தங்களைத் தவிர்க்கும் வகையில், நகரில் இயங்கும் அவசர சேவை பிரிவுகள் standby நிலையில் காத்திருக்கின்றன.