உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் சிக்கிய பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பொரலஸ்கமுவாவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் தங்கியிருந்த போது ஒரு பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தப் பெண்ணிடம் இருந்து போலி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. விசாரணைகளில், வெலிகடையில் உள்ள ஆடம்பர 4 மாடி வீட்டின் உரிமையாளர் மற்றும் இன்னும் ஒருவரும் சேர்ந்து போலி ஆவண தயாரிப்பு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் கணினிகள், அச்சுப்பொறிகள், லேமினேட்டிங் இயந்திரங்கள், போலி தேசிய அடையாள அட்டைகள், போலி வருமான அனுமதி பத்திரங்கள், வெளிநாட்டு விசாக்களின் நகல்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பாடநெறிச் சான்றிதழ்கள் என்பன கைப்பற்றப்பட்டவை
நுகேகொடை குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி, தலைமைப் பரிசோதகர் சமிந்த குலசிங்க தலைமையிலான குழுவினர் இந்த சோதனையை நடத்தினர். சோதனையின் போது, பெண் வைத்திருந்த இரண்டு அடையாள அட்டைகளில் ஒன்று போலியானது என்பது தெரியவந்தது.
விசாரணையின் மூலம் மோசடியின் முக்கியஸ்தர் தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.