உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தலைநகரின் பிரதான வீதியில் கார் பந்தயம் ; பொலிஸார் அதிரடி நடவடிக்கை

ஹோமாகம – புறக்கோட்டை பிரதான வீதியில் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் மகிழுந்து பந்தயம் ஒன்றை நடத்தியமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் தமிழ், சிங்கள புதுவருடத்தின் புண்ணிய காலத்தில் இந்த போட்டியை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போட்டியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் எதிராகக் கடுமையான சட்டம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.