உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்றைய தினம் (ஏப்ரல் 20) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கடமைகளுக்காக தபால் மூல வாக்களிப்பை நாடும் பொது சேவை ஊழியர்கள், பாதுகாப்பு அமலாக்க அதிகாரிகள் மற்றும் ஊடகக் குழுக்களுக்கு இத்திகதிகளில் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.