உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் நேர்ந்த சோகம் ; தீயில் எரிந்து இளம் பெண் உயிரிழப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (30 வயது) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) காலை, தானாகவே மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. கடுமையான தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், திங்கட்கிழமை அதிகாலை (ஏப்ரல் 28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். மேலும், சுன்னாகம் பொலிஸார் வழக்கை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.