உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையின் பிரபல மருத்துவமனையில் அவலம்; மருத்துவர்களின் அசமந்த போக்கினால் இளைஞன் பலி

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்களின் அசமந்த போக்கினால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கராப்பிட்டிய வைத்தியசாலையில் நோயாளியை பார்வையிடாத வைத்தியர்களின் அசமந்த போக்கினால் இளைஞன் மரணம் அடைதுள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பவத்தில் சிங்கள இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் இலங்கையின் பிரபல அரசாங்க மருத்துவமனையில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.