உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தேவேந்திர முனை இளைஞர்கள் படுகொலை சம்பவம் ; சிக்கிய சந்தேகநபர்கள்

கடந்த மாதம் 21 ஆம் திகதி, தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (07) அன்று, குறித்த சந்தேக நபர்கள் இரு சட்டத்தரணிகளுடன் கந்தர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒருவர் துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர்கள் மனித படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 35 வயதுடையவர்கள் என்பதும், அவர்கள் கந்தர மற்றும் தேவேந்திர முனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.