உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ். வைத்தியசாலையில் கலாட்டாவில் ஈடுபட்டு பெண் ; பொலிசார் மீது மருத்துவ வட்டாரங்கள் அதிருப்தி

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி கலாட்டாவில் ஈடுபட்ட பெண்ணொருவர் மீது, பதினைந்து நாட்கள் கடந்தும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மருத்துவ வட்டாரங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
ஒரு நோயாளி அதிதீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மருத்துவ விடுதிக்கு மாற்றப்பட்டதற்குத் தன்னைப் போலவே நோயாளிக்கு துணையாக வந்த பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த இடத்தில் அவர் மருத்துவமனைக்குள் ரகளையில் ஈடுபட்டு, மருத்துவர்களை மிரட்டினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் வழங்கிய பூரண விளக்கங்களைப் புரிந்து கொள்ளாமல், நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுவதாக அந்த பெண் மிரட்டல் விடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெல்லிப்பளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மருத்துவர்களின் குற்றச்சாட்டாகும்.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பதில் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் அனுராதபுரம் மருத்துவமனையில் நடந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து சிந்தனை தீவிரமாகியுள்ளது. இந்நிலையில், தெல்லிப்பளை சம்பவத்தில் பொலிசாரின் அலட்சியம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.