உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் இளைஞனின் முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (23) காலை துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த இளைஞன், தனது ஆட்டோவில் அந்த இடத்திற்கு வந்து துாக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரது குடும்பத்தினர் இளைஞனை காணவில்லை என தெரிவித்து தேடிய நிலையில், அவரது அண்ணன் ஆட்டோவை காணிப் பகுதியில் நிற்பதை அவதானித்து அங்கு சென்று பார்த்தபோது, துாக்கில் தொங்கிய நிலையில் சடலம் கிடைத்துள்ளது.
தகவலைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனர். பின்னர், அது பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.