உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் மூளைக் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பளைவீமன்காமம், தெல்லிப்பளையைச் சேர்ந்த 23 வயதுடைய கவிந்தன் சாமினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தாண்டு தினத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதலில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சனிக்கிழமை (19) மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் திங்கட்கிழமை (21) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.