உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆசிரியையின் சடலம்

கிளிநொச்சி, பளை – வேம்படிக்கேணியில் தனிநபருக்குச் சொந்தமான காணியிலுள்ள கிணற்றிலிருந்து ஆசிரியை ஒருவரின் சடலம் நேற்று (07) மீட்கப்பட்டுள்ளது.
கிணற்றுக்கு அருகில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து அயலவர்கள் குறித்த கிணற்றை அவதானித்து பரிசோதித்தபோது, கிணற்றில் பெண் ஒருவர் சடலமாகக் காணப்பட்டதை அடுத்து, இது தொடர்பில் பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், சடலமாக மீட்கப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஆசிரியை என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.