உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி மாவட்டம் கணேசபுரம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில், ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர், கிளிநொச்சி காந்திநகரைச் சேர்ந்த 36 வயதுடைய விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தராக அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல பணிக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை என்பதன் பேரில் குடும்பத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேடுதலின் போதே, கணேசபுரம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மரணம் எவ்வாறு நிகழ்ந்தது, அது தற்கொலையா அல்லது பிற காரணமா என்பது குறித்து தற்போது உறுதி செய்யப்படவில்லை. மரண விசாரணை மற்றும் உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.