உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சாரதியின் தூக்க கலகத்தால் விபத்து; நால்வர் மருத்துவமனையில்

குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் பாதெனிய சந்திக்கு அருகில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரத்திலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த கார் ஒன்றின் சாரதி தூக்கக் கலக்கத்தால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த கார் முன்னால் பயணித்த லொறியுடன் மோதியதுடன், அருகில் பயணித்த மோட்டார் சைக்கிளும் சம்பவத்தில் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பாதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம், சாரதிகள் வாகனம் ஓட்டும் போது தூக்கமின்மை மற்றும் சோர்வை தவிர்த்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.