உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கோடிக்கணக்கான பணத்துடன் கான்ஸ்டபிளுடன் கைதான நால்வர் ; வழங்கப்பட்ட அதிரடி உத்தரவு

மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியில் நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஒரு மகிழுந்தில் இருந்து ரூ. 3 கோடியே 28 இலட்சத்து 40 ஆயிரம் பணம் மற்றும் 150 கிராம் தங்க நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மகிழுந்தைச் செலுத்தியவர், மேல் மாகாண புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனுடன் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள், “இந்த பணம் வெளிநாட்டில் வசிக்கும் சகோதரியிடமிருந்து பெற்றது” என தெரிவித்துள்ளார். எனினும், வாக்குமூலங்களில் வந்த முரண்பாடுகள் காரணமாக, அனைத்து சந்தேகநபர்களும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்குப் ஒப்படைக்கப்பட்டனர்.
நேற்று , சந்தேகநபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.