உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; கணவன் கைது
தெனியாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹாரஹேன-என்செல்வத்த பகுதியில் 9 மாத கர்ப்பிணியாக இருந்த 25 வயது இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இஷாந்தி ராமசாமி என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், கடந்த மே 17ஆம் திகதி இரவு தனது இல்லத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து, அவரது கணவனான 27 வயதுடைய அமில்காந்த குமார், “மனைவி தூக்குப்போட்டுக்கொண்டுள்ளார்” என கூறியதுடன், வீட்டு வாசலுக்கு அருகே கத்தியதையும் அயலவர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
உயிரிழந்த பெண்ணின் மகனான 7 வயது சிறுவன், “தாயை தந்தை அடித்தார்” எனத் தெரிவித்துள்ளதாகவும், தாயின் மரணம் பற்றி சந்தேகத்திற்கிடமான தகவல்களை வழங்கியுள்ளார்.
இஷாந்தி, சம்பவத்திற்கு முந்தைய தினம் (மே 18) பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்லத் தயாராகியிருந்ததாகவும், இந்நிலையில் மரணம் ஏற்படுவது ஒருசாரமாக சந்தேகத்திற்கிடமானது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெனியாய பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைக்காக நீதிமன்ற அனுமதியுடன் கைதிலிருத்தப்பட உள்ளார்.