உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சொகுசு காரில் வைத்தியரின் மோசமான செயல்; நண்பருடன் கைது

மாத்தறை தியாகஹ பிரதேசத்தில் உள்ள கடை அறை ஒன்றில், ஐஸ் போதைப்பொருள் பாவித்து கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் வைத்தியரின் நண்பரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையின் போது, வைத்தியரிடமிருந்து 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், அவரது நண்பரிடமிருந்து 2100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 180 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சந்தேக நபர் பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.