உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில். தேசிய மக்கள் சக்தியினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையால் மக்கள் கடும் விசனம்

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வருகை தந்துள்ள இலங்கை பிரதமர், இந்துப் புனித ஆலயங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இலங்கையில் தேர்தல் விதிமுறைகளின்படி, ஏதேனும் சமயத்தலம், அதனுடன் தொடர்புடைய காணிகள் அல்லது ஆதனங்களை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று உறுதியான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவர்ும் இந்த ஒழுக்க நெறி விதிகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி தாங்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதில்லை என்றும், மக்கள் குறைகளை கேட்கும் நிகழ்வுகளை மட்டுமே முன்னெடுக்கின்றனர் என்றும் விளக்கமளித்துள்ளனர்.
இதேவேளை, நீர்வேலி கந்தசாமி கோவிலில் தேசிய மக்கள் சக்தியின் பதாதைகள் கட்டப்பட்டமை குறித்து பலர் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தலைவர் நிரோஸ் கூறுகையில்,
“கோவில் வளாகத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய முடியாது எனத் தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். முறையீட்டின் பின்னர் பதாதைகள் அகற்றப்பட்டன.”
ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்ட பின்னர், வேட்பாளர்கள் மேடையில் ஏறி தங்களை அறிமுகப்படுத்தி வாக்குக் கோருதல் நிகழ்த்தியதாகவும் நிரோஸ் தெரிவித்துள்ளார்.